#BigBreaking : தப்பி ஓடிய அதிமுகவின் முக்கிய புள்ளி., சற்றுமுன் குண்டர் சட்டத்தில் கைது.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர்: மதுக்கூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை செந்தில் குண்டர் சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றபோது தப்பியோடிய செந்திலை சென்னையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கரை அடுத்த கல்யாணஓடை என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு வயது 54 ஆகிறது. இவர் அதிமுகவின் மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு முத்துப்பேட்டை பகுதியில் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, கடந்த 14ம் தேதி செந்திலை மதுக்கூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது, செந்திலின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் மதுக்கூர் காவல் நிலையம் முன்பு, திரண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அப்போது தனது ஆதரவாளர்களை சமாதானம் செய்வதாக கூறிவிட்டு, காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த செந்தில், அப்படியே தப்பித்து தலைமறைவாகினார்.

இதனையடுத்து, செந்தில் ஆதரவாளர்கள் 15 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான செந்திலை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

இந்நிலையில், அதிமுக நிர்வாகி செந்திலை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mathkoor senthil arrested kundas law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->