கட்சியின் தலைமைப் பொறுப்பு... ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவின் மூத்த தலைவர்கள் எடுத்த முடிவு.? - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தங்களுக்கு சாதகமாக கட்சியின் விதி முறைகளை மாற்றிக் கொள்வதாக கூறப்படுகிறது. 

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்த அன்வர்ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து, அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நிமிக்கப்பட்டார்.  

இந்நிலையில், அதிமுக தலைமை பொறுப்புகளை முழுமையாக கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் செயல்பட்டு  வருவதால் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பதட்டம் உருவாகியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் சசிகலா பக்கம் அதிமுக  மூத்த தலைவர்கள் சாயத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இதற்காக சசிகலாவுக்கு ஆதரவாக  மூத்த தலைவர்கள் தூது விடுவதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக தலைமை பதவிகளை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கைப்பற்றுவதை தடுக்க சசிகலாவை பயன்படுத்தலாம் என மூத்த தலைவர்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk leaders may be join sasikala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->