வெறும் கதாநாயகனாக வென்றவர் அல்ல என் தலைவன்... சரித்திர நாயகன் என் தலைவன்... ஜெயக்குமார் நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தன்னைத் தானே தலைவன் என்று அவர் சொல்லியதே இல்லை. தலைவன் என்ற பட்டம் மக்களாக கொடுத்தது!

வெள்ளித்திரையில் நல்லதை மட்டுமே மக்களுக்கு காட்டியவர்! நிஜ வாழ்க்கையில் நல்லதை மட்டுமே மக்களுக்கு செய்தவர்!!

தனது எதிரிகளை கூட அவமதித்ததில்லை அதனால் தான் இத்தனை புகழ் அவருக்கு!!!

அதனால் தான் தமிழகம், அவரை மூன்று முறை தலைமை கொள்ள செய்தது.

தோல்வியே அறியாதவர், அரசியலில் எதிரிகளுக்கு தோல்வியையே பரிசாக அளித்தவர்...

வையகத்து வாழ்வாங்கு புகழ் கொண்டவர், அவர் மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பெற்றவர்...

மக்களின் ஆதரவுடன், மகத்தான வெற்றி பெற்று, இதய தெய்வம் இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்ற இந்நாள், வரலாற்றில் ஒரு பொன்னாள்

வெறும் கதாநாயகனாக வென்றவர் அல்ல என் தலைவன், மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்த மக்கள் நாயகன், சரித்திர நாயகன் என் தலைவன். என்றென்றும் எம்.ஜி.ஆர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk jayakumar mgr


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->