''நான் ஒரு தெருப் போராளி. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து செயல்படும் செயல்பாட்டாளர் அல்ல;'' காங்கிரஸ்-க்கு தர்மேந்திர பிரதான் பதிலடி ..!
Dharmendra Pradhan hits back at Congress calling him a street fighter
''தான் ஒரு தெருப் போராளி. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து செயல்படும் செயல்பாட்டாளர் அல்ல'' சிஜேபி போராட்டக்காரர்களில் போராட்டத்திற்கு பின்பு தனது பதவியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்த முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் கட்சிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இயக்கத்தினர் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட அணைத்து எதிர்க்கட்சிகளின் போராதரவுடன் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், முதல் முறையாக இன்று ஒரு எம்பியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

அவரின் வருகைக்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டிருந்த பாஜக எம்பிக்கள், அவரை வரவேற்க நுழைவு வாயிலில் காத்திருந்தனர். அப்போது அவர் வளாகத்துக்குள் நுழைந்தபோது, அவரை வரவேற்று சிறப்பு தொப்பி ஒன்றை அணிவித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர். அதனை பெரும் புன்னகையுடன் தர்மேந்திர பிரதான் ஏற்றுக்கொண்டார்.
அப்போது பாஜக எம்பி ஒருவர், தனிப்பட்ட முறையில் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு மத்திய அமைச்சர் பதவி இருந்து விலகியது அநேகமாக இதுவே முதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரவேற்பு நிகழ்வின்போது காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ், தர்மேந்திர பிரதானை அணுகி இப்படி நடப்பது இயல்புதான் என கூறினார். அதற்கு தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுக்கும் வகையில் ''ஒன்றும் நடந்துவிடவில்லை. நான் ஒரு தெருப் போராளி. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து செயல்படும் செயல்பாட்டாளர் அல்ல'' கூறியுள்ளார்.

அமைச்சரவையில் இருந்து விலகிய போதிலும், அந்த மனக்கசப்பு எதுவும் இல்லாமல் அரசியல் ரீதியாக அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பதை உணர்த்துவதாக இந்த உரையாடல் பார்க்கப்பட்டது. அத்துடன் பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக செயல்பட்ட தர்மேந்திர பிரதான், அம்மாநிலத்தில் என்டிஏ ஆட்சி தொடர்வதை உறுதிப்படுத்தினார். அதேப்போன்று, மேற்கு வங்க பிரச்சாரத்திலும் முக்கிய பங்கு வகித்து, கடந்த மே மாதம் அம்மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைய அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dharmendra Pradhan hits back at Congress calling him a street fighter