பிடி உஷாவின் 42 ஆண்டுகால சாதனை முறியடிப்பு; 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்..! - Seithipunal
Seithipunal


 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

2026-ஆம் ஆண்டுக்கான (நகோயா) ஆசிய விளையாட்டு மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், பிடி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராமராஜ் முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் தேசிய சாதனையான 55.42 விநாடிகளை சமன் செய்திருந்தார். தற்போது அதைவிட வேகமாக ஓடி  அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.டி. உஷா, 55.42 வினாடிகளில் இலக்கைக் கடந்து நிகழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்த நீண்ட கால சாதனையை வித்யா ராமராஜ் 54.75 வினாடிகளில் கடந்து தகர்த்துள்ளார்.

இந்தியா இதுவரை 04 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கல பதக்கங்களை வென்று 40 பதக்கங்களை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu athlete Vithya Ramraj won the bronze medal in the 400m hurdles breaking PT Ushas 42 year old record


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->