இ20 பெட்ரோல் விவகாரத்தில் குடும்பத்தினர் மீது பொய்யான அவதூறு; மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிதின் கட்கரி..!
Nitin Gadkari is pursuing a case in the Bombay High Court for false defamation against his family in the E20 petrol issue
இ20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரம் தொடர்பாக, தன்னையும் தன் குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நிதின் கட்கரி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''சமூக ஊடகங்களில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள், டீப் ஃபேக் படங்கள் மற்றும் காணொலிகளில் இ20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்துடன் என்னையும் எனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது.

எத்தனால் கலப்புக் கொள்கையானது பெட்ரோலிய அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே, இதன்மூலம் எனது குடும்பம் ஆதாயம் அடைவதாக சொல்வது ஆதாரமற்ற பொய்.'' எனகே குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அதிக அளவிலான எத்தனால் கலப்பு சில வாகனங்களின் செயல்திறனில் சிக்கல்களையும், சேதத்தையும் ஏற்படுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தன் மீதான அவதூறு பதிவுகளை பரப்ப உதவிய குற்றச்சாட்டில் மெட்டா, கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர நிதின் கட்கரிக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதற்கு முன்னதாக, அரசாங்கத்தின் இ20 எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதாக நான்கு சமூக ஊடகப் பிரபலங்களுக்கு எதிராக நாக்பூரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Nitin Gadkari is pursuing a case in the Bombay High Court for false defamation against his family in the E20 petrol issue