ஓபிஎஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியை புறக்கணித்த ஈபிஎஸ்.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் இப்தார் விருந்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தலைமையேற்று நடத்துவார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் கடைசி வரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. முதலமைச்சர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்தற்கு பல்வேறு விஷயங்கள் இருப்பதாக தொண்டர்கள் கருதுகின்றனர். நேற்று நடைபெற்ற விருந்து  நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம், மருத்துவர் ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் மற்றும் அமைச்சர்கள், எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி போட்ட முட்டுக்கட்டையால் மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத்துக்கு இடம் கிடைக்காமல் போய் விட்டதால் ஓபிஎஸ் கடும் கொந்தளிப்பில் உள்ளார் என தெரிவித்துள்ளனர். 

உண்மையான காரணம் என்னவென்றால் சில நாட்களாகவே கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விருந்தில் கலந்து கொண்டு உணவு அருந்த முடியாது என்பதாகும் ஓய்வில் இருந்து உள்ளார்.
 

English Summary

admk iftar party eps not attend


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal