ஜெயலலிதாவின் நினைவு தினம் - அதிமுக தலைமை கழகம் விடுத்த அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் டிச.5-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளார்.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினமான டிச.5-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்துகிறார். 

தொடர்ந்து, கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர். பின்னர், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடவளாகத்தில் உறுதிமொழி மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், அனைத்துப் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படத்தை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS JJ memorial day


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->