துணை முதல்வராக துரைமுருகன்! எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் அரசியல் கணக்கு!
ADMK EPS DMK Duraimurugan DyCM
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் தலைப்புடன் 2026 தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக பொதுச்செயலாளர், நேற்றைய பிரச்சாரத்தில் பேசியதாவது,
"திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகனே துணை முதல்வர் ஆக முடியாது. அங்கு துணை முதல்வர், முதல்வர், தலைவர் ஆக வேண்டும் என்றால் அதற்கு கருணாநிதி குடும்ப ஆண் வாரிசாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனை குறிப்பிட்டுள்ள அதிமுக ஐடி விங்க், "சக்திவேல் போன்ற திமுக தொண்டர்கள் உழைத்து உழைத்து நலிவடைந்து போனாலும், அதையும் வைத்து விளம்பரம் தேடுவது எப்படி என்பதை மட்டும் தான் அந்த கட்சி நினைக்கும்.
உழைக்கின்றவர்களை உயர்த்தும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். அதற்கு நம்மில் ஒருவராக இருந்து, கிளைச் செயலாளராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி, இன்று நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்களே சாட்சி" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK EPS DMK Duraimurugan DyCM