அதிமுகவினரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
ADMK EPS Condolence to Meenal Ammal
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. R.B. உதயகுமார், MLA., அவர்களுடைய தாயாரும், அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் திரு. உதயகுமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி மீனாள் அம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று எடப்பாடி K.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condolence to Meenal Ammal