அதிமுக எம்எல்ஏ கைது! என்ன பூச்சாண்டி காட்டுறிங்களா? கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin MLA Arrest
அரக்கோணத்தில் எம்ஆர்எப் தொழிற்சாலையில் போராட்டம் நடத்திய, அதிமுக எம்எல்ஏ சு. ரவி, முன்னாள் எம்பி கோ.அரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ. அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin MLA Arrest