எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணத்தில் திடீர் மாற்றம்!
ADMK Edappadi pazhanisamy Campaign
அதிமுக சார்பில் நடைபெற்று வரும் “தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்” என்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நாளை இரண்டு இடங்களில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அந்த நிகழ்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதலில், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி மக்களுடன் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த இடங்கள் நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நெரிசல் காரணங்களைக் குறிப்பிட்டு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பிரசார நிகழ்வுக்கு இன்னும் ஒரு நாளே இருந்த நிலையில், இடம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது மாற்று தேதியை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

English Summary
ADMK Edappadi pazhanisamy Campaign