திமுக ஆட்சியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய சிபிஐ அறிக்கை! அதிமுகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
ADMK DMK Govt ajithkumar case cbi
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், பொய் புகாரின் அடிப்படையில் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது திமுக ஆட்சியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த வழக்கை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதை நன்கு அறிந்து, அதிமுக தொடர்ந்த சட்டப் போராட்டத்தின் காரணமாகவே இவ்வழக்கு சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிபிஐ விசாரணையில், இந்த கொலைக்கு அடிப்படையாகக் காட்டப்பட்ட “நிகிதா” என்ற பெண் அளித்த நகை திருட்டு புகார் பொய்யானது என்று நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
அப்படியானால், பொய் புகார்தாரர் “நிகிதா”-வை காப்பாற்றுவது யார்?
அந்த கைது உத்தரவுக்குப் பின்னால் இருந்த அதிகாரிகள் யார்? குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்படுகிறதா?
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, சிறையில் இருந்தபடியே வழக்கை சந்திக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் ஒரு கட்சியின் ஏவல் படைகளாக மாறினால், அது ஜனநாயகத்தின் சீரழிவு என்பதை இவ்வழக்கு உணர்த்துகிறது.
பொம்மை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே, இந்த வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தயாராக இருக்கிறீர்களா?
அல்லது வழக்கம்போல குற்றவாளிகளை காப்பாற்றும் அரசாகவே திமுக அரசு தொடருமா?
அஜித்குமாரின் மரணத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வரை அதிமுக ஓயாது" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK DMK Govt ajithkumar case cbi