உதயநிதிக்கு பணம் கொழிக்கின்ற விளையாட்டுகள் மட்டுமே கண்ணுக்கு தெரியுது... வீராங்கனைகளின் வீடியோவை வெளியிட்டு அதிமுக கண்டனம்!
ADMK Condemn to DyCM Udhay
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த #BrassBand விளையாட்டு வீராங்கனைகள், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று தேசிய போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போது இன்னும் 4 நாட்களில் தேசிய போட்டிகள் நடைபெற உள்ள இச்சூழலில் போட்டி முடிவுகளை மாற்றி அமைத்து, தங்களை 3-வது இடத்திற்கு தள்ளியுள்ளதாக மாணவிகள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
முடிவுகள் அறிவித்து, சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கிய பிறகு, ஒரு மாதம் கழித்து முடிவை மாற்றுவது ஏன்? இதுகுறித்து ஏன் இதுவரை தமிழக அரசு எந்த முறையீடும் மேற்கொள்ளவில்லை?
விளையாட்டு துறைக்கு அமைச்சராக இருக்கின்ற துணை முதல்வர் உதயநிதிக்கு, கார் ரேஸ் போன்ற பணம் கொழிக்கின்ற விளையாட்டுகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவது போல், மற்ற விளையாட்டுகள் மீதோ, வீரர்கள் மீதோ, அக்கறை செலுத்த மனம் இல்லாமல் இருப்பது ஏன்?
இதேபோன்று திமுக அரசு அலட்சியமாக இருந்து தான், ஒருமுறை தேசிய போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இம்முறை, அதுபோன்ற எந்தவொரு தவறும் நிகழக் கூடாது.
எனவே, திமுக அரசின் விளையாட்டுத் துறை உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, நம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள், தேசிய #BrassBand விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DyCM Udhay