கேடுகெட்ட திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக வாழும் சூழல் இல்லை - அதிமுக!
ADMK condemn to DMK mk Stalin govt
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "வேங்கை வயல் மலம் கலப்பு, இடைக்காட்டூர் தாக்குதல், நாங்குநேரி கொடூரம் என திமுக அரசின் முகத்திரை நாளுக்கு நாள் கிழிந்து கொண்டு வருகிறது!
இந்தியாவிலேயே பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளில் தமிழகம் முன்னிலை வகிப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நேர்ந்த அவமானம்.
சட்டம் ஒழுங்கைச் சரியாகக் கையாளத் தெரியாமல், பட்டியலின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும் இந்த 'பொம்மை முதல்வர்' இதற்குப் பொறுப்பேற்று வெட்கித் தலைகுனிய வேண்டும்!
விளம்பர அரசியலில் காட்டும் வேகத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் காட்டாதது ஏன்? கேடுகெட்ட திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக வாழும் சூழல் இல்லை என்பதே இன்றைய கசப்பான உண்மை!" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK condemn to DMK mk Stalin govt