எப்படி இப்படி ஒரு முதல்வரால் வாய் கூசாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் கூற முடிகிறது? அதிமுக வெளியிட்ட கண்டனம்!
ADMK Condemn to DMK MK Stalin Govt
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால்,ஒரு சில இடங்களில் மக்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து உயிர் தப்பியதே பெரிது என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில்,
"எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு, ஒன்னும் பிரச்சனை இல்ல" என எப்படி ஒரு முதல்வரால் வாய் கூசாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் கூற முடிகிறது?
தான் மக்களின் வலிகளை ஒருபோதும் உணராத வெறும் பொம்மை முதலமைச்சர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
aபொம்மை முதல்வர் அவர்களே- உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது தான்... ஆனால் உங்களை முதல்வராய் தேர்ந்தெடுத்தது தான் தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரச்சனை!
எஞ்சியிருக்கும் ஆட்சி காலத்திலாவது, பொறுப்புள்ள முதல்வராய் மக்களின் பிரச்சனைகளை அணுகவும் ,பிரச்சனைக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சித்துப் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin Govt