எங்கே இருக்கிறார் சுராஜ்...?! 24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பி வைக்கும் நிலையிலா..? இதை சொல்வதற்கு திமுக அரசு வெட்கப்பட்டிருக்க வேண்டும் - அதிமுக கண்டனம்!
ADMK Condemn to DMk Govt mk stalin thiruthani suraj attack
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "திருத்தணியில் ஒடிசா மாநில இளைஞர் சூரஜ் மீது 17 வயது சிறார்கள் நடத்திய கொடூர தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தற்போது சூரஜ் எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்ற எந்த விவரமும் தெரியாமல் உள்ளது.
தமிழகத்தை நம்பி வந்த அவரை, ஒழுங்காக மருத்துவ சிகிச்சை கூட பார்க்காமல் அனுப்பி வைத்துவிட்டது இந்த விடியா திமுக அரசு.
24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பி வைக்கும் நிலையிலா சூரஜ் மருத்துவமனைக்கு வந்தார்? இதை சொல்வதற்கு திமுக அரசு வெட்கப்பட்டிருக்க வேண்டும்.
சூரஜ்ஜின் நலத்தை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை. பொம்மை முதல்வர் பதில் சொல்லியே ஆகவேண்டும்!
Where Is Suraj? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
ADMK Condemn to DMk Govt mk stalin thiruthani suraj attack