கூட்டணி குறித்து பேசக்கூடாது! கண்டிஷன் போட்ட எடப்பாடி பழனிச்சாமி! செல்லூர் ராஜூ சொன்ன செய்தி! 
                                    
                                    
                                   ADMK BJP Alliance Sellur raju 
 
                                 
                               
                                
                                      
                                            அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து மனவேதனை கொள்கிறோம்.  241 பேரின் மரணம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதியளித்த அவர், “அது குறித்து எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேளுங்கள். கூட்டணி குறித்து பேசக்கூடாது.
கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது என எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக தெரிவித்துள்ளார்" என்றார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு குறித்தும் கண்டனம் தெரிவித்த செல்லூர் ராஜூ, “ஒரு முன்னாள் முதலமைச்சரை இழிவாக பேசும் நிலைமையில் சென்றுள்ளார். இது தமிழ்நாட்டின் பாரம்பரியத்துக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் எதிரானது. மக்களிடம் அவர் மதிப்பை இழந்திருக்கிறார். இதுபோன்ற பேச்சு தகுதியற்றது” எனக் கூறினார்.
“மதுரையின் இந்த பிரமாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அதிமுக ஆட்சிதான். 8000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டும், குடிமராமத்து திட்டமும் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகள். அதே நேரத்தில், மத்திய திட்டங்களை தி.மு.க. அரசு ‘தங்கள்’ திட்டமென ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
திமுக அமைச்சர் மூர்த்தியின் தேர்தல் பணிகள் எங்களுக்கு குறித்து கவலையில்லை, மக்களுக்கு எங்களது ஆட்சி காலத்தின் செயல் நினைவில் உள்ளது" என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். 
                                     
                                 
                   
                       English Summary
                       ADMK BJP Alliance Sellur raju