மீண்டும் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்..? நயினார் நாகேந்திரன் சொன்ன முக்கிய தகவல்!
ADMK BJP Alliance OPS PM Modi DMK Alliance
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலினை நேற்று இருமுறை சந்தித்த பின், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இதையடுத்து அவர் திமுகவோ அல்லது விஜய்யின் தவெகவோடு இணையும் வாய்ப்பு இருப்பதாக கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் பேசினேன்.
பேசும் சூழ்நிலையிலேயே, தனது முடிவை உறுதி செய்தார். இது தனிப்பட்ட கருத்தா அல்லது வேறு சூழ்நிலை காரணமா என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.
மேலும், “ஓபிஎஸ் விரும்பினால், தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்வேன். முதல்வரை அவர் சந்தித்தது தொகுதி தொடர்பான விவகாரமாக இருக்கலாம். ஓபிஎஸ் பிரதமரை சந்திக்கக் கூடாது என இபிஎஸ் எவ்வித அழுத்தமும் கொடுத்ததில்லை” என்றும் நாகேந்திரன் தெரிவித்தார்.
English Summary
ADMK BJP Alliance OPS PM Modi DMK Alliance