பாஜகவில் இருந்து விலகும் பிரபல நடிகை.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கௌதமி பாஜகவில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் அன்பழகன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

பாஜக வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்துள்ளேன். 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை" என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அன்பழகன் என்பவருக்கு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக உள்ளனர் என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி மேலிடத்திற்கு தனது விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். 

இது குறித்து பாஜக மூத்த நிர்வாகி இராம சீனிவாசன் தெரிவித்ததாவது, "அவர் கட்சியில் இருந்து விலகியது பற்றி கவலையில்லை. உங்களை வாழ்த்தி வழியனுப்புகிறோம்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor gowthami releive bjp party


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->