அதிரடி நடவடிக்கை! ஈ -ரெஜிஸ்டர் பதிவேட்டில் 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள்...! - அன்பில் மகேஷ்
Action Students above 5 years age e register Anbil Mahesh
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நெல்லை மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவு தேர்வு தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக அமைச்சர் 'அன்பில் மகேஷ் பொய்யாமொழி' பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்ததாவது,"பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக இங்கு தலைமை ஆசிரியர்களை சந்தித்து நடத்தப்படவுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படும் இடங்களை கண்டறிந்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மற்ற இடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.மூடப்பட்ட 207 பள்ளிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து ஈ-ரெஜிஸ்டர் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் மத்திய அமைச்சர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசி உள்ளார்.
அவரது நம்பிக்கை சார்ந்து பேசியது அவரது இஷ்டம். அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித்துறை தமிழக முதலமைச்சர் வழி காட்டுதலோடு செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.இதனை தற்போது அரசியல் வட்டாரங்கள் வரவேற்று வருகின்றனர்.
English Summary
Action Students above 5 years age e register Anbil Mahesh