லஞ்ச ஒழிப்பில் அதிரடி ஆட்டம்! லஞ்சம் வாங்குபவர்களை காட்டிக்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு...! - தமிழக அரசு அதிரடி...!
Action fight against corruption If you betray those who take bribes you get reward 1 lakh Tamil Nadu government takes action
தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக அரசியல் களத்தில் குதித்த த.வெ.க., எதிர்பார்ப்புகளை மீறிய வெற்றியை பெற்று அரசியல் அரங்கில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உயர்ந்த த.வெ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.

முதல்-அமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான துறைகள் கடந்த 16-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன. அதன்பின், நேற்று அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அறைகளில் பொறுப்பேற்று பணிகளை தொடங்கினர்.
பதவியேற்ற உடனேயே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய முதல்-அமைச்சர் விஜய், “அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்போம்” என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, த.வெ.க. அரசின் நிர்வாகத் தூய்மை மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் அடிமட்டத்திலிருந்தே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “எந்த அரசு துறையிலும் ரூ.1,000 லஞ்சம் கேட்டால்கூட ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம்.
தகவல் வழங்குவோருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், புகார் அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் 1800 425 1555 என்ற கட்டணமில்லா உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, முதல்-அமைச்சர் விஜய் தானே ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுவது அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்களின் பணத்தில் ஒரு பைசாவையும் நான் தொடமாட்டேன்” என்று உறுதியளித்துள்ள அவர், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை உருவாக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
English Summary
Action fight against corruption If you betray those who take bribes you get reward 1 lakh Tamil Nadu government takes action