“TN 07 CM 2026” நம்பர் பிளேட்.. விஜய்யை சி.எம் என அன்றே கணித்த வெங்கட் பிரபு! வைரலான வெங்கட் பிரபுவின் ‘GOAT’ கணிப்பு!
TN 07 CM 2026 number plate Venkat Prabhu predicted Vijay as CM on the same day Viral Venkat Prabhu GOAT prediction
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் இடம்பெற்றிருந்த “TN 07 CM 2026” என்ற நம்பர் பிளேட் தான்.
விஜய் பயன்படுத்திய காரில் இந்த நம்பர் பிளேட் இடம்பெற்றிருந்தது அப்போது ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. தற்போது விஜய் உண்மையிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், “அன்றே கணித்தார் வெங்கட் பிரபு” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது “TN 07 CM 2026” என்ற நம்பர் பிளேட்டை சிறப்பாக ஃப்ரேம் செய்து நினைவு பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா அளித்த பேட்டியில், வெங்கட் பிரபு தொலைபேசியில் பேசிய போது சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:“நான் அப்படி நம்பர் பிளேட் வைத்தது முதலில் விஜய் சாருக்கே தெரியாது. அவர் அதை பார்த்துவிட்டு ‘டேய்…’ என்று ஆச்சரியப்பட்டார். பிறகு ‘என்னமோ உன் குருட்டுத்தனத்தில் ஏதோ செய்ற’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.”
மேலும் அவர் கூறுகையில்,“விஜய் முதலமைச்சராக ஆன பிறகு பலரும் எனக்கு ஃபோன் செய்து, ‘எப்படி இவ்வளவு சரியாக கணித்தீர்கள்?’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சி.எம் ஆனது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி,” என்றார்.
கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகியுள்ள விஜய்க்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். “இனிமேல் தமிழக அரசியலில் விஜய்யின் காலம் தொடங்கிவிட்டது” என்றும் சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக நடிகர் சங்க நிர்வாகிகள், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN 07 CM 2026 number plate Venkat Prabhu predicted Vijay as CM on the same day Viral Venkat Prabhu GOAT prediction