மெடிக்கல் ஷாப்பா? போதை கூடாரமா? ரகசியமாக நடந்த போதை மாத்திரை பிசினஸ்...! -திண்டுக்கல் மெடிக்கலில் வாலிபர் அதிரடி கைது!
Secret drug pill business Youth arrested Dindigul Medical
திண்டுக்கல் நகர்ப்பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் காவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கிழக்கு ரதவீதியில் செயல்பட்டு வந்த “சிட்டி மெடிக்கல்” என்ற மருந்துக் கடையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து அதிக போதை தன்மை கொண்ட மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் நத்தர்ஷா தெரு பகுதியை சேர்ந்த ஆரிப் அகமது (32) என்பவரை காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து சுமார் 15 ஆயிரம் போதை ஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் கைது செய்யப்பட்ட ஆரிப் அகமதுவை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Secret drug pill business Youth arrested Dindigul Medical