சிக்கிய அபிநந்தன்., சரியாக 9 மணிக்கு இந்தியா நம் மீது தாக்குதல் நடத்தும்! வெளியான பரபரப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

மறுநாள் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது. அப்போது பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப்படை ஓட ஓட விரட்டி அடித்தது. இதில் பாகிஸ்தான் f16 வகை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் இந்தியா விமானம் ஒன்று பழுதாகி, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.

ஆனால் அவர் இறங்கிய பகுதி பாகிஸ்தான் எல்லைக்குட்பட்டது என்பதால், பாகிஸ்தான் அவரை போர் கைதியாக சிறை பிடித்தது. இதுகுறித்து வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவவே உடனடியாக இந்தியா அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானை எச்சரிக்கை செய்தனர். இதன் அழுத்தம் காரணமாக மார்ச் ஒன்றாம் தேதி இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

அபிநந்தனை போர் சிறைக் கைதியாக சிறை பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் அப்போது ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி முகமது குரோஷி ராணுவ தளபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் என்ன மாதிரியான ஆலோசனை நடத்தப்பட்டது என்பது குறித்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் அயாஸ் சாதிக் நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,

"அன்று நடந்த அந்த கூட்டம் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. அந்த அறைக்குள் ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வா வந்தார். அப்போது அவர் கால்கள், உடல் நடுங்கியது. அவர் உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது. அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குருஷி, அபிநந்தனை இப்போது விட்டுவிடுவோம், எல்லையில் பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும் என்றார்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

abhinandan return india issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->