'ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அவரை கனிமொழி கண்டிக்க வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்! - Seithipunal
Seithipunal


தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததைத் தொடர்ந்து, விசிக தலைவர் தொல். திருமாவளவனை விமர்சித்து திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கவிதைப்பதிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அமைச்சரும் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, ஆ.ராசாவின் பதிவிற்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

'திமுகவிடம் கட்டுப்பாடு இல்லை':
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, மன்னிப்பு கேட்க வேண்டும்: நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பின்படியே தற்போதைய ஆட்சி மாற்றமும், அதிகாரப் பகிர்வும் நடந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவரான தொல். திருமாவளவனை இழிவுபடுத்தியதற்காக, தமிழக மக்களிடமும், விசிக தலைவரிடமும் ஆ.ராசா உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கனிமொழி கண்டிக்க வேண்டும்: பேரறிஞர் அண்ணா வழிய வந்ததாகக் கூறிக்கொள்ளும் திமுகவில் இன்று கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் முழுமையாகக் காணாமல் போய்விட்டது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆ.ராசா வெளியிட்டுள்ள இந்த அநாகரிகமான பதிவை, திமுகவின் துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி எம்பி உடனடியாகக் கண்டிக்க வேண்டும்.

இழிவுபடுத்தும் வார்த்தைகளுக்கு எதிராக நடவடிக்கை:
ஆ.ராசாவின் கவிதையில் இடம்பெற்ற சில குறிப்பிட்ட ஒப்பிடல்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், "எந்தவொரு அரசியல் பிரச்சனை என்றாலும், உடனே ஒரு பெண்ணின் உறவைச் சம்பந்தப்படுத்தி, சொல்ல முடியாத அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிப்பது திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது. ஒரு மாபெரும் கட்சியின் தலைவரை இப்படித் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மீது நிச்சயம் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் கூட்டாளியான திமுகவிற்கும் புதிய தவெக அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

விசிக தலைவர் திருமாவளவனைப் பாதுகாக்கும் வகையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்துள்ள இந்தக் கண்டனங்கள், கூட்டணியின் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்திக் காட்டியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Raja Must Apologize to Thirumavalavan and Public Demands TVK Minister Aadhav Arjuna


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->