90% குடும்பத்தினர்  செல்போன் வைத்திருக்கிறார்கள்..தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல- பழனிவேல் தியாகராஜன்.! - Seithipunal
Seithipunal


2022-2023 ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை கடந்த வாரம் மார்ச் 19ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மேலும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மார்ச் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு சட்டப்பேரவையில் இன்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தமிழகம் ஏழை மாநிலம் அல்ல வளர்ந்த மாநிலம். தமிழகத்தில் 75 சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் சொந்த வீட்டில் வசிக்கின்றனர். 90 சதவிகித குடும்பத்தினர் செல்போன் பயன்படுத்துகின்றனர். 66 சதவிகித வீடுகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பிரிட்ஜ் உள்ளது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90% of families have cell phones Tamil Nadu is not a poor state Palanivel Thiagarajan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->