இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றும் பிரதமர் மோடி.!  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், எண்பத்தி ஐந்தாவது முறையாக நாட்டு மக்களுடன் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் இன்று பேச இருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 11 மணி அளவில், அகில இந்திய வானொலி மூலம் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

இந்த மாதத்திற்கான கடைசி நாளான இன்று, 11:30 மணி அளவில் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார். இது 85வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஆகும்.

மேலும் ஒரு சிறப்பாக மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து 11:30 மணி அளவில் இந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சி கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.

பிரதமரின் இன்றைய வானொலி நிகழ்ச்சியில் நாட்டில் அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் தடுப்பூசி போடும் விழிப்புணர்வு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

85 th Mann Ki Baat PM Modi 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->