மயிலாடுதுறைக்கு 8 புதிய அறிவிப்புகள்!!! திட்டங்களை அள்ளித் தெளித்த முதலமைச்சர்!
8 new announcements for Mayiladuthurai Chief Minister announced a slew of projects
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்தார்.மேலும், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அதில்," மயிலாடுதுறையில் சீரான வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் நீடூர் ஊராட்டிசியில் 85 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம். குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
வெள்ளக்கோவில் கிராமங்களில் ரூ.8 கோடியில் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
சீர்காழியில் புதிய நகராட்சி அலுவலகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும். தரங்கம்பாடி-ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
சீர்காழி, திருமுல்லைவாயல் பகுதிகளில் மேற்கூரை நீட்டிப்பு, தூர்வாரும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை. சீர்காழி நகராட்சியில் தேர் வீதிகளில் ரூ.8 கோடி மதிப்பில் வடிகால் வசதி மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தார்.
English Summary
8 new announcements for Mayiladuthurai Chief Minister announced a slew of projects