என் எம்எல்ஏ-க்களுக்கு தலா 5 கோடியா...? - ஒடிசா அரசியலில் குதிரை பேரம்... சிவகுமார் அதிரடிப் புகார்...! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தலில் பாஜக சார்பில் மூவரும், பிஜு ஜனதா தளம் சார்பில் இருவரும் என மொத்தம் 5 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

ஒரு வேட்பாளர் வெற்றிபெற 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜக தனது பலத்தின் மூலம் 2 எம்பிக்களை எளிதாகத் தேர்வு செய்ய முடியும்; அதேபோல், காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் பிஜு ஜனதா தளமும் 2 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தடுக்கவும், ‘குதிரை பேரம்’ அச்சத்தாலும் காங்கிரஸின் 8 எம்எல்ஏ-க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்குத் தலா 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக 2 பேரை காவலர்கள் கைது செய்துள்ளதாகவும், ஆனால் தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் அந்தப் பேரத்தை நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணப் பரிமாற்ற விவகாரம் ஒடிசா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 Crores Each My MLAs Horse Trading Rocks Odisha Politics Shivakumar Levels Explosive Allegation


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->