சென்னை வழியாக... 22 பெட்டிகளில் ₹ 42 கோடி!! காங்கிரஸின் திட்டம் அம்பலம்!!
42 crore seized from former Congress councilor house in Bangalore
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகராட்சியின் கவுன்சிலரின் மகனும், ஒப்பந்ததாரருமான பிரதீப் என்பவர் வீட்டில் இருந்து 22 அட்டைப்பெட்டிகளில் 41 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது கட்டிலுக்கு அடியில் பணம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்காக இந்த பணம் சென்னை வழியாக தெலுங்கானாவிற்கு மாற்ற திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறன. அதேபோன்று ஹைதராபாத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 60 கோடி ரூபாய் அளவுக்கு கட்டு கட்டாக கருப்பு பணம் சிக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூர் நகர முன்னாள் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் அஸ்வத்தாம்மா மற்றும் அவரது கணவர் அம்பிகாபதி ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
42 crore seized from former Congress councilor house in Bangalore