அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.!!
3 years imprisonment for Minister Ponmudi
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலகட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு தரப்பில் பொன்முடியின் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வாதங்களை முன்வைத்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. மேலும் இன்று பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்த நிலையில் இருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆஜராகினர். அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்ஜர் இளங்கோ தண்டனை வழங்கும் போது வயது, மருத்துவ காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வாய்த்த. அதனை ஏற்க மறுத்த நீதிபதி சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளர்.மேலும் பொன்முடிக்கு வழங்கபட்ட சிறை தண்டனையை 30 நாட்ட்கள் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
3 years imprisonment for Minister Ponmudi