சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் கீழ் 2500 காலியிடங்கள்; முதல்வர் விஜய் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக கடந்த மே 10 -ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டார். 

இதை தொடர்ந்து, இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவினை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த சிங்கப்பெண் அதிரடி படை திட்டத்திற்காக ரூ. 354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக சிங்கப்பெண் அதிரடி படையில் 2,500 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாகவே அதனை தடுக்க இந்த சிங்கப் பெண் அதிரடி படை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவில் முதல் முறையாக டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் சிங்கப்பெண்கள் ஈடுபடுவார்கள் என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.  

அடுத்து, சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க விழாவுக்கு பின் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் நேரத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை கண்காணிப்பில் இருக்குமென தெரிவித்தார்.

 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய செயல்பாடுகள்:

பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளுதல், குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், காவல்துறையின் இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல், பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல், மக்கள் இயக்கமாக செயல்படுதல் ஆகியவை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2,500 vacancies under the Singappenn Special Task Force


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->