மோடி அமைச்சரவையில் 20 வாரிசுகள்! பட்டியலை வெளியிட்ட ராகுல்காந்தி!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமர் மோடி அமைச்சரவை 20 வாரிசுகள் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்தியாவில் முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது.

இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதில் 71 பேர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.


 இந்த நிலையில், ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மதுரை அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். போராட்டம், சேவை, தியாகம்தான் எங்கள் மரபு என்று சொல்வோர் வாரிசுகளுக்கு பதவி கொடுத்துள்ளனர். அவரின் பேச்சுக்கு செயல்பாடுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் நரேந்திர மோடி என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 successors in the Modi cabinet Rahul Gandhi released the list


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->