வெடித்த கலவரம்.. அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு.. வெளியே செல்ல பெண்களுக்கு மட்டும் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் வன்முறையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கார்கோன் நகரில் பெண்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கார்கோனில் கடந்த 10ஆம் தேதி ராமநவமி விழா முன்னிட்டு இராம பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது சில மர்ம நபர்கள் ஊர்வலம் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதனால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை தணிக்கும் விதமாகவும், மேலும் போராட்டம் ஏற்படாத வகையிலும் கார்கோன் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கலவரத்தில் தொடர்புடைய 121 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.89 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில். நான்கு நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 வரை தளர்த்தப்பட்டது.  இதில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெண்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான பெண்கள் கடைகளில் குவிந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

144 relaxed for 2 hours in khargone


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->