பயங்கரவாத பாதையில் இருந்து திரும்பிய 11,000 இளைஞர்கள்...! மோடி அரசு சாதனை...! - அமித் ஷா பெருமை - Seithipunal
Seithipunal


அசாம் மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் முழு வேகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், ஆளும் பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரடியாக களமிறங்கி மக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திப்ரூகார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், ஹைலகண்டி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று உற்சாகமான உரையாற்றினார். தனது உரையில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அசாமில் ஆயுதம் ஏந்தியிருந்த 11 ஆயிரம் இளைஞர்களை சமாதானப் பாதைக்கு கொண்டு வந்து, அவர்களை இயல்பு வாழ்க்கையில் இணைத்துள்ளது.

இது அசாமின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய அடித்தளம்” என தெரிவிக்கப்படுகிறது.மேலும், “போடோலேண்ட் மற்றும் தடை செய்யப்பட்ட உல்பா அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, அசாமை அமைதி மற்றும் வளர்ச்சி நோக்கில் முன்னேற்றியுள்ளோம்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெள்ளப் பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்த, பல பெரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அசாமின் எதிர்கால வளம், சட்டவிரோத ஊடுருவல்களை தடுக்கிறதில் தான் இருக்கிறது. அதை உறுதியுடன் செயல்படுத்தும் திறன் பா.ஜ.க.வுக்கே உள்ளது” எனவும் அமித் ஷா தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.இந்த உரைகள் அசாம் தேர்தல் களத்தில் புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11000 youths returned from path terrorism Modi government achievement Amit Shah proud


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->