வாட்சாப் பிசினஸ் பயனாளர்களுக்கு சூப்பர் வசதி.. இனி வேற ஆப் தேவையே இல்லை.!
Whatsap New update about shopping
அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது வாட்சப் பிசினஸ் ப்ரொபைல் பயனர்களுக்காக ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த அப்டேட் கொலம்பியா, பிரேசில், இந்தோனேசியா, பிரிட்டன் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் மட்டும்தான் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிசினஸ்களை தேடி பயனர்கள் சாட் செய்து பொருட்களை வாங்க முடியும். நேரடியாக ஷாப்பிங் வெப்சைட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவசியமே இதில் இருக்காது. பேமென்ட் வசதிக்காக வாட்சப் சில நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
புதிய ஷாப்பிங் அம்சம் ஜியோ மார்ட் சேவையை போல செயல்படுவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான முறையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பயனாளர்கள் பண பரிமாற்றத்தை செய்ய முடியும்.
English Summary
Whatsap New update about shopping