இறந்தவர்கள் உங்களுடைய கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


கனவுகள் என்பது எப்போதுமே விசித்திரமானவை தான். ஒரு கனவு எதற்காக வருகிறது, எதனால் வருகிறது என்று நாம் சரியாக அறிய முடியாது. 

சில கனவுகள் நம்முடைய எண்ணங்களின் கலவையாக இருக்கும். ஆனால் சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருக்கும்.

கனவுகளிலும் கூட பல்வேறு வகை இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது. நம்முடைய வீட்டில் பெரியவர்கள் கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அவர்கள் பேசுவது சில செய்திகளை கொண்டிருக்கும்.

அவ்வாறு அவர்கள் பேசினாலும் கூட கனவில் நாம் அவர்களுக்கு பதில் அளித்தது போன்ற கனவுகள் வருவது தீயதை சுட்டிக்காட்டும் என்று கூறுவர்.

நமது கனவில் இறந்தவர்கள் வருவது ஏன்? அவர்கள் பேசுவது போன்ற கனவுகள் கூறும் செய்தி என்ன என்பது பற்றி இங்கு காணலாம்…

இறந்தவர்கள் நம்முடைய பெயர் சொல்லி அழைக்கும் படியான கனவினை வெற்றுக் கனவு என்கிறார்கள். இந்த கனவு வரும் போது உங்களுக்கு வண்ணம் ஏதும் தெரியாது.

உங்களுக்கு அருகே அல்லது உங்களை சுற்றி ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறந்தவர்கள் உங்களுடைய பெயர் சொல்லி அழைக்கும் ஒலி மட்டுமே கேட்கும்.

தூங்கும் போது கனவில் உயிருடன் இல்லாதவர்கள் வந்து உங்களுடைய பெயர் சொல்லி அழைப்பது, அவர்கள் நீங்கள் கடின நேரத்தை எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தியாக கூறப்படுகிறது.

நீங்கள் தொடர்ந்து அவர்களுடைய குரலை கேட்டுக் கொண்டே இருப்பது, உங்களுக்கு நற்செய்தி வர போகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறி.

உங்களுடைய குரலை அவர்கள் மிக அமைதியான முறையில் அழைப்பது போன்ற கனவு வருவது, நீங்கள் உங்கள் பழைய கால உறவுடன் மீண்டும் சேர வாய்ப்புகள் வருவதை உணர்த்துகிறதாம்.

மிக உயர்ந்த மற்றும் ஆழமான குரலில் உங்களது பெயர் சொல்லி அழைப்பது நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப போகிறீர்கள் என்பதை உணர்த்துவதாம்.

யாரும் இறக்காத அல்லது இல்லாத கல்லறை, யாரும் இல்லாத இறுதி சடங்கு போன்றவை உங்களது கனவில் வந்தால், உங்களுடைய இல்லற வாழ்க்கை அபாயமாக மாற போவதை குறிப்பதாம்.

கனவில் நல்ல ஆவிகள் வருவது உங்களுடைய தொழில் மற்றும் இல்லறம் சிறக்க போவதை காட்டும் அறிகுறி.

கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது ஒரு பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What do you mean if the dead are in your dreams ?!


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->