கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் நீங்க..! அழகு குறிப்புகள்..!!
கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் நீங்க..! அழகு குறிப்புகள்..!!
பல பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். சிறு வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை இந்த பிரச்சனை அனைவருக்கும் உண்டு. இதை எளிதாக நீக்கி விடலாம்.
கரு வளையம் மறைய எளிய வழிகள்:
வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி 30 நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 5 நாட்கள் செய்தாலே கரு வளையம் மறந்துவிடும்.

உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.
தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைந்துவிடும்.

கருவளையம் வருவதற்கு என்ன காரணம்:
சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
English Summary
The black ring on the bottom of the eye beauty tips