நரைமுடிக்கு bye bye சொல்லுங்க... இந்த ஒரு இலை போதும்...! - Seithipunal
Seithipunal


நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் எவ்வாறு ஹேர்பேக் தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி மாதக்கணக்கில் கருப்பாகவே இருக்கும்.மேலும், முடி உதிர்வு பிரச்சனையை போலவே இளநரை பாதிப்பும் இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இருக்கிறது.

இதில் முதுமையை குறிக்கும் விதமாக நரை முடிகள் தோன்றினால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இளம் பருவத்தில் நரை முடிகள் உருவாவதை இன்று பல பேரிடம் பார்க்க முடிகிறது.

ஆனால், இவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் அனைத்தும் பெரும்பாலான நேரத்தில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றனர்.இதனை தடுக்க இயற்கையான முறையில் ஹேர்பேக் தயாரித்து அதனை பயன்படுத்தி நரை முடிகளை கருப்பாக மாற்றலாம்.

அதற்கான ஹோம்மேட் ஹேர்பேக் தயாரிக்கும் முறை குறித்தி இதில் பார்க்கலாம்.இந்த ஹேர்பேக் தயாரிப்பதற்கு முதலில் ஃப்ரெஷ்ஷான ஓமவல்லி இலைகள் சுமார் 10 அல்லது 15-ஐ இரும்பு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் சாறு முழுவதும் வெளியேறும் வகையில் கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து, இந்த இலைகள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதை ஒரு புறம் வைத்துவிட்டு, 2 ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் ஆகிய 2 யும் மிக்ஸியில் லேசாக அரைக்க வேண்டும். இதனை, ஊற வைத்திருக்கும் ஓமவல்லி இலைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். தனியாக வடிகட்டிய சாறை, சிறிதளவு அவுரி பொடியுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்தக் கலவை பசை பதத்திற்கு வந்ததும், மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம். இந்த ஹேர்பேக்கை 15 நிமிடங்களுக்கு காற்று போகாமல் மூடி வைக்க வேண்டும்.இறுதியாக, இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் நரை முடி அனைத்து கருப்பாக மாறி விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Say goodbye to gray hair This one leaf is enough


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->