'ஆசிம் முனீர் சர்வாதிகாரி, கோழை, பாகிஸ்தானியர்களை கொன்றவர்' என அமெரிக்காவில் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு 'சொந்த நாட்டு மக்களை கொன்றவர், படுகொலை செய்தவர் என அவருக்கு எதிராக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கோஷம் போட்டனர்.அமெரிக்கா உடனான ராணுவம் மற்றும் பிராந்திய உறவை மேம்படுத்த ஐந்து நாள் விஜயமாக வாஷிங்டன் சென்றுள்ளார்.

இதனையறிந்த பாகிஸ்தானியர்கள் பலர், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன்பு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். 'ஆசிம் முனீர் , நீங்கள் கோழை', ' படுகொலை செய்தவர், வெட்கப்பட வேண்டும்,'' சர்வாதிகாரி, 'பாகிஸ்தானியர்களை கொன்றவர்' என கோஷம் போட்டனர். அத்துடன், அவர்கள் அந்த வளாகத்துக்குள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், ' துப்பாக்கி பேசும் போது, ஜனநாயகம் இறக்கிறது,', ஆசிம் கொலைகாரர்' என்ற வாசகங்களை ஒளிரச் செய்யும் வாகனங்களை கொண்டு வந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest in the US against the Pakistani army chief calling him a murderer of his own people


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->