செல்வம் தரும் மணி பிளான்ட் செடி...! வீட்டில் எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

மணி பிளான்ட் தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம்.

மணி பிளான்ட் வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்தவொரு செலவும் ஆகாது. ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இவை இதயம் போன்ற வடிவில் வளரக்கூடியது.

பாசிடிவ் எனர்ஜி :

மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஏனென்றால், தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கிறது. இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விநாயகரின் திசை :

தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணங்களுக்காகத்தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்கிறார்கள்.

செல்வம் பெருகுவதற்கான காரணங்கள் :

தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயவனவற்றை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது.

வடகிழக்கு, குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்கிரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள்.

வைக்கக்கூடாத திசை :

எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. அந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும். ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.

ஆனால், துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பதுதான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். 

செல்வம் பெருகும் மணி பிளான்ட்...

செல்வம் பெருகும் மணி பிளான்ட்டை மண்ணிலும், நீரிலும் வளர்க்கலாம். 

அதே போல் வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம்.

இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிட வேண்டும். இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

money plant


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->