மெஸெஜ் ல வர்ற 'இந்த' இமோஜிக்கு 'அந்த' அர்த்தமா.? இத்தன நாளா இது தெரியாம போச்சே.! - Seithipunal
Seithipunal


நாம் தற்போது தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு செய்திகளை எழுத்து வடிவாகவும் குரல்  பதிவாகவும் அனுப்ப பல்வேறு செயலிகள் தற்போது சமூக வலைதளங்களிலும்  செல்போன்களிலும் வந்து விட்டன. இவை தவிர சில செய்திகளை சித்திரங்களின் மூலமாக போவதற்கு என்றே  இமோஜி என்ற குட்டி பொம்மைகள் வாட்ஸ் அப் டெலிகிராம் மற்றும்  மெசஞ்சர் போன்ற செயல்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் பலவற்றை நாம் பல காலங்களாக பயன்படுத்தி வந்திருந்தாலும் நமக்கு அவற்றின் அர்த்தம் தெரியாமல் இருந்திருக்கும் அதுபோன்ற சில இமோஜிகளையும் அவற்றின் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.

🤲 பாம் அப் டுகெதர்:

இந்த இமோஜி அமெரிக்காவில் புத்தகம் படிப்பதை குறிப்பதாக பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி பார்த்தால்  இது இறைவனிடம் கையேந்துவது மற்றும் தொழுகையின் போது பயன்படுத்துவதாக அமைகிறது. நாம் இவற்றை பயன்படுத்தும் போது யாரிடம் ஏதாவது உதவி  கேட்பதாக இதனை பயன்படுத்துகிறோம். இதுதான் இந்த இமோஜிகான அர்த்தமாகும்.

👐  ஓபன் ஹேண்ட்ஸ்:

இந்த இமோஜியையும் நாம் பல நேரங்களில் இதன் அர்த்தம் புரியாமலேயே பயன்படுத்தி இருப்போம்.  இணையதள மொழியில் இந்த இமோஜிக்கு அர்த்தம்  கட்டிப்பிடித்தல் என்பதாகும். பேஸ் இமோஜியில் இது 🤗  இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும்.

✊ ரைஸ்ட் ஃபிஸ்ட்:

இந்த இமோஜி தான் ரைஸ்ட் ஃபிஸ்ட் என அழைக்கப்படுகிறது. என்னால் முடியும் என்பதை காட்டுவதற்காகவும் ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெறுவோம் என்பது அடையாளமாகவும்  இந்த இமோஜி பயன்படுத்தப்படுகிறது. நிறைய போராட்டங்களில் போராளிகள் கையை இவ்வாறு உயர்த்தியவாறு போராடுவதே  இதற்குக் காரணமாகும்.

🤞 கிராஸ்டு ஃபிங்கர்:

இந்த இமோஜி தான் கிராஸ்டு ஃபிங்கர் என அழைக்கப்படுகிறது. இணையதள மொழியில் இது ஒரு நேர்மறையான செய்கையாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஏதேனும் நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பினால் நான் உங்களுக்கு இந்த ஈமோஜியை அனுப்பும்போது அது ஒரு நற்செய்தியாக பார்க்கப்படுகிறது.

🖖 வல்கன் சல்யூட்:

இந்த இமோஜி பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஒன்றாகவே இருந்திருக்கும். வால்கன் சல்யூட் என்றால்  நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் நன்றாக வர வேண்டும் என்று வாழ்த்துவதற்குரிய அடையாளமாகும். ஒருவர் உங்களுக்கு இந்த இமோஜி அனுப்பினால் உங்களை அவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lets find out what the meaning of emojis we use in activities like WhatsApp Telegram Messenger


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->