எப்படியேனும் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவரா? என்னவெல்லாம் சாப்பிடலாம்.?!  - Seithipunal
Seithipunal


முட்டைக்கோஸ், குடமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம். அதை விட இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைப்பதோடு, நச்சுக்களை வெளியேற்றி, விரைவில் எடையை குறைக்க உதவும்.

எனவே, தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது எனர்ஜியாகவும் செயல்பட உதவும்.

பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரை தவிர்த்து, அதற்கு பதிலாக சோம்பு கலந்த தண்ணீரை குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரை குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள அடிப்படியான சதைகள் குறையும்.

சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளை குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலியும்.

வாழைத்தண்டு சாறு பருகலாம். அருகம்புல் சாறும் உடல் எடையை குறைக்கிறது.

இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.

நொறுக்குதீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.

கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.

இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய் பொருட்களை சாப்பிட வேண்டாம்.

பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.

உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை அதிகம் சாப்பிடாதீர்கள்.

பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது. உடலுக்கு கெடுதலே வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to weight loss easy tips in tamil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->