அரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகளா!! இனி வீணாக்காதீர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை பொருத்தவரை அரிசி இன்றியமையாத உணவாகும். தினமும் சமைக்க பயன்படும் இந்த அரிசியை கழுவி அந்நீரை வீணாக்கிவிடுவார்கள். ஆனால், அந்த கழுவிய நீரில் அதிகப்படியான விட்டமின்ஸ், மினரல்ஸ், அமினோ ஆசிட் போன்றவை நிறைந்துள்து. இதனை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தி பலன் பெறலாம். 

அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளது. இதனை பயன்படுத்தி முகத்தை கழுவினால் பருக்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

இதனை கிளன்சராக பயன்படுத்தலாம். சிறிய காட்டன் துணியை பயன்படுத்தி முக்கியெடுத்து முகத்தை துடைக்கலாம். முகத்தை கழுவுதக் கூடாது. தானாகவே காய்ந்துவிடும். அந்த நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக முகத்திற்கு சென்றடைவதால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இளவயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்ப்படுவதை தடுக்கலாம். 

சீனாவில் ஓர் ஊரில் பெண்கள் அனைவருக்கும் மிக நீளமான முடி இருக்கும். அதற்கு காரணம் என்ன என்று அப்பெண்களிடம் கேட்ட பொழுது தினமும் அரிசிக் கழுவிய நீரில் தலைக்கு குளிப்பது தெரியவந்தது. 

சீயக்காய், ஷாம்பு என எதை பயன்படுத்தினாலும் இறுதியாக அரிசி கழுவிய நீரை தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை குளிப்பாட்டும் பொழுது அரிசி கழுவிய நீருடன் சிறிது சாதாரண நீரை சேர்த்து குளிக்க வைத்தால் சரும நோய்கள் வராமல் தடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to use rice washing water for face and hair


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->