Healthy version: வெந்தயக் கீரை இட்லி செய்வது எப்படி?
Healthy version How to make fenugreek and spinach idli
வெந்தயக்கீரை இட்லி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
இட்லி மாவு 4 கப்
வெந்தயக்கீரை 3 கட்டு
பெரிய வெங்காயம் 2
எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காய்ந்த மிளகாய் 8
கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம் 1 /2 டீஸ்பூன்
கடுகு 1 /4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 3 டீஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :
வெந்தயக்கீரை இட்லி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.வெந்தயக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளவும்.பிறகு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு, பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி, அதனுடன் இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச்சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.வெந்தயக்கீரை இட்லி தயார்.
English Summary
Healthy version How to make fenugreek and spinach idli