ஆரோக்கியதில் பல நன்மைகள் தரும் பன்னீர் உணவுகள்.!
healthy benefits of paneer
உடல் ஆரோக்கியத்திற்கு புரதம் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியம். புரதம் சத்து நிறைந்த பன்னீரின் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பன்னீரின் நன்மைகள்:
புரதம் அதிகமாக உள்ள உணவுகளான இறைச்சி, மீன் மற்றும் முட்டை மட்டுமல்லாமல் பனீர் அல்லது காட்டேஜ் சீஸில் புரதம் அதிகமாக உள்ளது. பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக உள்ளது. உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட் குறைவான உணவை தினம் சாப்பிட வேண்டும்.
மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. இந்த பனீரை சாண்ட்விச், கிரேவி, புலாவ், பக்கோடா, கட்லெட் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் பனீர் ஸ்டீக் தயாரிப்பது மிகவும் எளிமையானது. அதாவது காட்டேஜ் சீஸ், கொத்தமல்லி இலை, மிளகாய், சீஸ், தக்காளி ஆகியவை சேர்த்து சுவையான ரெசிபி தயாரிக்கலாம். இந்த ரெசிபியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
இந்த கலவையை கோதுமை பிரட்டில் வைத்து பேக் செய்து சாப்பிட்டால் உடலுக்கு குறைந்த அளவு கலோரிகள் கிடைக்கும்.
English Summary
healthy benefits of paneer