வெள்ள அபாய எச்சரிக்கை மக்களே! கடலூர் வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு...!
Flood warning people Excess water released to Cuddalore Veeranam Lake
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள ''வீராணம்'' ஏரிக்கு, கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.இந்த ஏரியின் மூலம் சுமார் 44,756 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

அதுமட்டுமின்றி இந்த ஏரி மூலம் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.மேலும்,கோடை காலத்தில் ஏரியில் குறைந்த அளவு நீர் இருந்த நிலையில் திடீரென கடந்த சில தினங்களாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் கல்லணையிலிருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் வடவாறு வழியாக வினாடிக்கு 1,900கன அடி வீதம் அனுப்பப்படுகிறது.
இதனால் காட்டுமன்னார் கோவில் பகுதியில் வடவாற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் நிரம்பி செல்கிறது.இதில் கீழணையின் மொத்த உயரம் 9 அடியாகும். தற்போது 5.5 அடிக்கு நீர் உள்ளது. கல்லணையிலிருந்து கீழணைக்கு வரும் உபரி நீரில் 1,920 கன அடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வெளியேற்றப்படுகிறது.
மேலும், வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50அடியாகும். இதில் தற்போது 44.10 அடி நீர் உள்ளது.இதில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை சார்பில் வடவாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Flood warning people Excess water released to Cuddalore Veeranam Lake