சுற்றுலா பயணிகள் பயப்பட வேண்டாம்!8000 கன அடியாக சரிந்த ஒகேனக்கல் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம், கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் சாம்ராஜ் நகர், மைசூரு, மாண்டியா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, கேரட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம் பாளையம், ஓசூர், கனகபுரா, அஞ்செட்டி, ராசி மணல், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நேற்று காலை தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14000 கனஅடி தண்ணீர் வந்தது.தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது.

மேலும், கர்நாடகாவிலும் பெய்த மழையும் குறைந்ததனால் நீர்வரத்து சற்று சரிந்துள்ளது.அதனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 8000 கன அடியாக குறைந்தது.

வழக்கம்போல், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிகிறது.இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists dont panic The water level in Hogenakkal has dropped by 8000 cubic feet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->