சுவையான மீல் மேக்கர் தோசை இப்படி செஞ்சு பாருங்க! அசந்துருவீங்க!
healthy and crispy meal maker dosa receipe
சுவையான மீல் மேக்கர் தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 1 கப்
தக்காளி -1
காய்ந்த மிளகாய் - 2
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 3/4 கப்
தயிர் - 1/4 கப்
முழு சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
மீல் மேக்கர், தக்காளி மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தண்ணீரில் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவை நன்றாக வெந்த பின் அதனை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கலவை நன்றாக அரைத்த பின் இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு 1 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்
நன்றாக கலக்கி சோசை மாவு பதத்தில் கலந்தப்பின் தோசை கல்லில் ஊற்றி நன்றாக இரு பக்கமும் வெந்ததும் எடுத்தால் நாவிற்கு சுவையான மீல்மேக்கர் தோசை ரெடி.
English Summary
healthy and crispy meal maker dosa receipe